மதுரை:

மிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில்  மேயர் பதவி உள்பட தலைவர்கள் பதவிக்கு  மறைமுக தேர்தல் நடத்துவதாக தமிழகஅரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை நேற்று இரவு கவர்னர் ஒப்புதலுடன்  பிறப்பித்தது. அதன்படி மேயர், நகராட்சித் தலைவர்,  பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார்.

முறையீடாக அவர் தாக்கல் செய்த  மனுவை, மனுவாக தாக்கல் செய்வதாக விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்ததனர். அதையடுத்த, அவர் இன்று மனுவாக தாக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று மனுத்தாக்கல் செய்தால் நாளை விசாரணை நடைபெற வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.