மறைமுக தேர்தல்: அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு!

மதுரை:

ள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி உள்ளதை  ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர், தமிழகத்தில் நடைபெற் உள்ளாட்சி தேர்தலில், மேயர், நகராட்சித் தலைவர், ஊராட்சித் தலைவர் போன்ற பகுதிகளுக்கு  நேரடி தேர்தலுக்கு பதிலாக மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்,  பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும்போது தான் இணக்கமான சூழல் ஏற்படும் என்றும், அதுவே கவுன்சிலர்கள் சேர்ந்து தேர்வு செய்யும் நபர்களுக்கும், மக்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. மறைமுக தேர்தல் என்பது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அந்த முடிவு மக்களுக்கு விரோதமாக இருந்தால் அதில் தலையிடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஆகவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வழக்கை நீதிமன்றத் ஒத்திவைத்துள்ளது.