சென்னை:

மிழகத்தில் கடந்த 3  ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், உச்சநீதி மன்றத்தில் கண்டிப்பைத் தொடர்ந்து, இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் நிலையில், உள்ளாட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தா மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்டார்.

அதன்படி தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13, வேட்பு மனுக்களை திரும்ப பெற  டிசம்பர் 18ம் தேதி கடைசி நாள் ஆகும். ஜனவரி 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நகராட்சிக்கான தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளாட்சிகளின் தலைவர் பதவிக்கான  மறைமுக தேர்தல் 11.01.2020 அன்று நடைபெறும் என்று அறிவித்தவர், 13368 பதவிகளுக்கு  மறைமுக தேர்தல்  நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளார்.