வருமான வரி தாக்கலுக்கு இனி நேரில் அலைய வேண்டாம்….மின்னணு முறைக்கு மாற்றம்

டில்லி:

தனி நபர்களின் வருமான வரி கணக்கு தாக்கலை மின்னணு முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இனி நேரடியாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

 

 

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் களப் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டுதலில், ‘‘சோதனை தொடர்பான மதிப்பீடுகளை தவிர நிலுவையில் உள்ள இதர வழக்குகளை மின்னணு முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வசதி உள்ள பகுதிகளுக்கு இந்த மதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த வருமான வரித்துறை முடிவு செய்தள்ளது. மேலும், மார்ச் 31ம் தேதி கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான நோட்டீஸ்களும் மின்னணு முறையிலேயே விநியோகிக்க வேண்டும். அனைத்து நோட்டீஸ், உத்தரவுகளில் சம்மந்தப்பட்ட அதிகாரி மின்னணு முறையிலேயே கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஃபேஸ்லெஸ் அசெஸ்மென்ட்’ என்ற முகமில்லா மதிப்பீடு முறை கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் அருண்ஜெட்லி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.