இந்தோனேசியா: மலையில் இருந்து பஸ் உருண்டு 27 பேர் பலி

ஜகார்த்தா:

இந்தோனேசியா ஜாவா தீவுகளில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 27 பேர் பலியாகினர்.

இந்தோனேசியா ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதி மலைகளை பார்வையிட 40 பேர் கொண்ட சுற்றுலா குழு பஸ்சில் சென்றனர். மலையில் இருந்து பஸ் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

பஸ் பலமுறை உருண்டதால் 27 பேர் பயணிகள் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.