ஜாகர்தா

ந்தோநேசிய நாட்டில் நாளை ஒரே நாளில் நாடெங்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய குடியரசு நாடான இந்தோநேசியாவில் இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. நாளை நடைபெற உள்ள இந்த தேர்தல் நாடெங்கும் ஒரே நாளில் நடந்து முடிவடைய உள்ளது. இதற்காக இந்தோநேசிய நாடு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ள இந்த தேர்தலில் இந்தோநேசிய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற உள்ளன. அத்துடன் இந்த நாடு பரந்து உள்ளதால் நேர வித்தியாசம் ஒவ்வொரு பகுதியிலும்  இருக்கும்.   எனவே மேற்கு பகுதி எல்லையில் வாக்குப் பதிவு முடிந்த 2 மணி நேரம் கழித்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ளது.

தேர்தல் பணிக்காக 72 லட்சம் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும். இந்த தேர்தலில் 19.3 கோடி வாக்காளர்கள் வாக்களித்து தங்கள் நாட்டின் குடியரசு தலைவரையும் 575 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்து எடுக்க உள்ளனர்.

இந்தோநேசியாவில் 17000 தீவுகள் உள்ளது. அதனால் ஒவ்வொரு தீவிலும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் மொத்தம் 8,10.329 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள வாக்காளர்களான 19.3 கோடி வாக்களர்களில் 9.63 கோடி ஆண் வாக்காளர்களும் 9.67 கோடி பெண் வாக்காளர்கலும் உள்ளனர். இதில் 50.3 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். 20.1 லட்சம் பேர் வெளிநாட்டில் உள்ளனர். இந்த தேர்தலில் பாதுகாப்புக்காக காவல்துறை, ராணுவத்தினர் உள்ளிட்ட 5,93,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.