இந்தோனேசியாவில் இன்று மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஜகர்தா:

ந்தோனேசியாவில் இன்று காலை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர்.

இந்தோனேசியாவில்  சம்பா தீவில் தெற்கு கடலோர பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 6 ஆக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பதறியடித்துக்கொண்டு வீதிக்கு வந்தனர்.

கடந்த மாதம் 28ந்தேதி அங்கு ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சமார் 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வசித்து வரும் சம்பா சம்பா தீவு பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டு பின்னர்  15 நிமிடங்கள் கழித்து கடுமையான 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இதே பகுதியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பீதிக்கு உள்ளானர்கள்.

இந்த தீவு சுலாவெசி தீவுக்கு தெற்கே 1,600 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.