4 புள்ளிகள் பெற்று பின்னிலையில் இருந்த சாய்னா நேவால் இந்தோனேசியாவின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டம் பட்டம் வென்ற அதிசயம்!

--

இந்தோனேசியாவின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் சாய்னா நேவால் வென்று அசத்தியுள்ளார். 4 புள்ளிகள் எடுத்த சாய்னா அதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

saina

இந்தோனேசியாவின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரோலின் மரின் மோதினர். போட்டி தொடங்கியதில் இருந்தே அதிரடியாக விளையாடிய கரோலின் 10 புள்ளிகள் பெற்று சாய்னாவை விட முன்னிலை வகித்தார்.

இந்நிலையில் 10-4 என்ற புள்ளிகள் பெற்ற நிலையில் கரோலின் மரின் சாய்னா அடித்த பந்தை தாவி பதிலடி கொடுக்க முயன்ற போது அவரின் வலது காலில் காயம் ஏற்பட்டது. காயம் பலமாக ஏற்பட்டதால் எழுந்து நடைக்க முடியாமல் போன ஸ்பெயின் வீராங்கனை போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து 4 புள்ளிகள் பெற்று பின்னடைவில் இருந்த சாய்னா நேவால் போட்டியில் வெற்றிப்பெற்றதாக நடுவர்களாக அறிவிக்கப்பட்டார். வெறும் 4 புள்ளிகளே பெற்ற சாய்னா அதிர்ஷ்டம் காரணமாக இந்தோனேசியாவின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளார்.