மூதாட்டியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு : உடல் மீட்பு

கசார்

லைப்பாம்பால் உயிரோடு விழுங்கப்பட்ட மூதாட்டியின் உடலை பாம்பை கிழித்து பிணமாக இந்தோநேசியாவில் மீட்டுள்ளனர்.

இந்தோநேசியா நாட்டில் உள்ளது மகசார் என்னும் ஊர்.  இந்த ஊரில் 54 வயதான மூதாட்டி வாதிபா வசித்து வந்தார்.   இவர் தனது வீட்டை ஒட்டி இருந்த தோட்டத்தில் காய்கறி பறிக்க சென்றுள்ளார்.   அதன் பின்னர் வீடு திரும்பாததால் அவருடைய வீட்டாரும் அக்கம் பக்கத்தினரும் அவரை தேடி அலைந்தனர்.

தோட்டத்தில் வாதிபாவின் செருப்புகளும் வெட்டுக் கத்தியும் கிடைத்தன. அருகில் ஒரு மிகப் பெரிய மலைப்பாம்பு உடல் உப்பிய நிலையில் இருந்தது.

வாதிபாவை அந்த மலைப்பாம்பு விழுங்கி இருக்கலாம் என்னும் சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் அடித்து கொலை செய்தனர்.   அந்த பாம்பின் உடலை கிழித்தனர்.   பாம்பின் வயிற்றின் உள்ளே வாதிபா பிணமாக இருந்தார்.    அவர் உடலில் காயங்கள் ஏதும் இல்லை.   மகசார் மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.