இந்தோனேசியா நிலநடுக்கம்- சுனாமி: பலி எண்ணிக்கை 384ஆக உயர்வு

--

ஜகர்தா:

ந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர  நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. சுமார் 6 உயரத்துக்கு எழுந்த கடல் அலைகள் கடற்கரையோர பகுதிகளையும், மக்களையும் இழுத்துச் சென்றது.

பல்வேறு கடற்கரை  கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. இதில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில்,  ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.   அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது வரை கிடைத்துள்ள தகவல்படி பலி எண்ணிக்கை  384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டி ருப்பதாகவும்  கூறப்படுகிறது.. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

You may have missed