முதல்நபராக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா…!

ஜகார்த்தா: கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ செலுத்தி கொண்டார்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பைசர், மாடா்னா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரஷியாவில் ஸ்புட்னிக் v தடுப்பூசியின் பயன்படுத்த அந்நாடு அனுமதி வழங்கியது.

இந்தோனேசியாவில் சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.  அதன்படி  மக்களின் அச்சங்களை போக்கும் வகையில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முதல் நபராக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.

அவரை தொடர்ந்து ராணுவ உயர் அதிகாரிகள், காவல்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பிப்ரவரிக்குள் 15 லட்சம் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதன் பின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.