இந்தோனேஷியாவில் பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு….வயிற்றை கிழித்து உடல் மீட்பு

ஜகார்த்தா:

இந்தோனேஷியா நாட்டின் முனா தீவு பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (வயது 54). சில தினங்களுக்கு முன் தோட்டத்துக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அப்பகுதியில் 27 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்து உருண்டு கொண்டிருந்தது. இதனால் சந்தேமடைந்த கிராம மக்கள் மலைப்பாம்பின் வயிற்று பகுதியை கிழித்து பார்த்தனர்,

அப்போது பாம்பின் வயிற்றில் மாயமான வா திபா சடலமாக இருந்தார். மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில் வா திபா அணிந்துச் சென்ற செருப்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திபாவின் தோட்டம் செங்குத்தான பாறைகள், குகைகள் நிறைந்து இருக்கும். அங்கு மலைப்பாம்புகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரியும். தோட்டத்துக்கு சென்ற வா திபாவை மலைப்பாம்பு எப்படியோ தாக்கி இரையாக்கியுள்ளது.