இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி…!

ஜகார்த்தா: ​இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தோனேசியாவில் புதிதாக 4,029 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 4,00,483 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டில் இன்று மட்டும் புதியதாக 4,029 பேருக்கு நோய்த் தொற்று  கண்டறியப்பட்டது. 100 பேர் பலியாக, 3,545 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்னர்.

ஒட்டு மொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 13,612 ஆக உள்ளது. இதுவரை 3,25,793 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

அதிகபட்சமாக ஜகார்த்தாவில் 1,02,678 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிழக்கு ஜாவாவில் 51,506 பேர், மேற்கு ஜாவாவில் 34,745 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.