இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடக்கம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும்  மாநிலங்களாக மகாராஷ்டிரா, டெல்லி ஆகியவை இருந்திருக்கின்றன.

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இந்தூர் மாவட்டத்தில் மட்டும் 842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாளில் மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர்

இதையடுத்து, இந்தூர் நகரத்தில் உள்ள அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்தூர் நகரமானது, இந்தியாவின் முதல் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதியாக கண்டறியப்பட்ட பகுதியாகும். இங்கு மட்டும் மொத்தம் 30,00,000 மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.