வாஷிங்டன்:
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மாணவி ஜூனியர் நோபல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜூனியர் நோபல் பரிசு 1942ம் ஆண்டு முதல் வெஸ்டிங்ஹவுஸில் வழங்கப்பட்டது. 1998ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை இன்டல் நிறுவனம் இதை வழங்கியது. மாணவர்களுக்காக நடத்தப்படும் பழைய அமெரிக்க அறிவியல் போட்டி தான் இது. அறிவியல் மற்றும் மக்கள் அமைப்பினர் (எஸ்எஸ்பி) ஒரு மருந்து நிறுவனத்தின் பங்களிப்புடன் தற்போது இதை நடத்தியுள்ளனர்.

மூளை காயம் மற்றும் நோய்கள் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சி திறன் போட்டியில் அமெரிக்கா வாழ் இந்திய மாணவி இந்திராணி தாஸ் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பரிசும் ஜூனியர் நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு அமெரிக்க வாழ் இந்தியரான அர்ஜூன் ரமணி 3ம் இடம் பிடித்துள்ளார். இவருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டுள்ளது. நெட்ஒர்க் மூலம் கணித வரைபட செயல்விளக்கம் மற்றும் கம்ப்யூட்டர் ப்ரோகிரமாம் ஆகியவற்றை மேற்கொண்டதற்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விண்டோஸ் சாப்ட்வேரில் சூரிய சக்தி தயாரிப்பை மேம்படுத்தியற்காக மாணவி அர்ச்சனா வெர்மா 5ம் இடம் பிடித்தார். இவருக்கு 90 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்பட்டது. மனித மரபணு தொகுதிகள் மற்றும் புற்று நோய் குறித்த ஆராய்ச்சிக்கு பிரதீக் நாயுடு 7வது இடமும், மலேரியாவுக்கு மருந்துகள் குறித்த ஆய்வுக்கு விரிந்தா மதல் 9வது இடமும் பிடித்தனர்.

40 பேர் கொண்ட இறுதி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் 8 மாணவர்கள் இடம்பெற்றனர். இவர்களுக்கு தலா 25 ஆயிரம் டாலர் பரிசளிககப்பட்டது. எஸ்எஸ்பி தலைவர் மாயா அஜ்மெரா கூறுகையில், ‘‘மொத்தம் ஆயிரத்து 700 பேர் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். அனைவரும் எங்களது விஞ்ஞான தலைவர்களாக வருவார்கள்’’ என்றார்.