‘இன்று நேற்று நாளை ’: இரண்டாம் பாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு…!

இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு இன்று நேற்று நாளை ரிலீஸானது. இன்றுடன் இந்தப் படம் ரிலீஸாகி 4 ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் முதல் பாகத்தை எழுதி, இயக்கிய ஆர்.ரவிகுமார், இரண்டாம் பாகத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் என இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார். .

முதல் பாகத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.பி.கார்த்திக், இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CV Kumar, Indru Netru Nalai, SB Karthik, vishnu vishal
-=-