உச்சநீதிமன்ற புதிய பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா : சட்ட அமைச்சகம் ஒப்புதல்

டில்லி

ச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவை நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் அடங்கிய குழு உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் காலி இடங்களுக்கான தேர்வை நிகழ்த்தியது.  அதில்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு இந்தக் குழு அனுப்பி வைத்தது.

அதன் படி உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக இந்து மல்ஹோத்ராவின் தேர்வுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.   இவர் நாளை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பார் என சொல்லப்படுகிறது.   சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சரோஜினி தேவி மற்றும் புகழேந்தி ஆகியோருக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.   அத்துடன் குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகளுக்கும், சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்துக்கு 4 நீதிபதிகளுக்கும், மும்பை உயர்நீதிமன்றத்துக்கு 1 நீதிபதிக்கும் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.