ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’.

இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார்.கவனித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நாகர்கோவிலில் நவம்பர் 29 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரிகின்றனர் .

இந்நிலையில் இந்துஜா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்கோவிலில் நடந்த படப்பிடிப்பில் நடித்த இந்துஜா தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளார்.

‘மூக்குத்தி அம்மன்’ படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.