விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் இந்துஜா…!

இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து வரும் “காக்கி” திரைப்படத்தின் உரிமைகளை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வாங்கியுள்ளது .

இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரபலமான ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவில், அவ்கத் இசையில், ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவின் பாடல் வரிகளில், கனல் கண்ணன் – ஷியாம் – ன் அதிரடி காட்சி அமைப்பில், தயாராகும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேயாத மான் புகழ் இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.