டெல்லி: காற்று மாசு அதிகரிப்பால் 2 நாட்களுக்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களை இயக்க தடை!

தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுவதால் இரண்டு நாட்களுக்கு தொழிற்சாலை பணிகளை நிறுத்தி வைக்க சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

pollution

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக தீபாவளிக்கு பட்டாசுக்கள் வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்த உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உத்தரவிட்டது. இருப்பினும், வழக்கத்தை விட காற்றின் மாசு அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

காற்று மாசுபாட்டினால் டெல்லியில் உள்ள மக்கள் சுவாசக் கோளறு, நுரையீரல் பாதிப்பினால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, பொதுமக்கள் வெளியே செல்வதை பொதுமக்கள் குறைத்துக் கொள்ளவும், தனியார் வாகனங்கள் தங்கள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வசிர்பூர், முன்ட்கா, நார்லா, பவானா, சஹிபாபாத் மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை வரும் புதன் கிழமை வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டெல்லி, ஃபரிதாபாத், குருகிராம், காஜியாபாத் மற்றும் நொய்டா உள்ள பகுதியில் கட்டுமானப் பணிகளை இரண்டு நாட்களுக்கு நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு ஆணையம் இந்த உத்தரவுகளை கட்டாயம் கடைப்பிடிக்க வலியுறுத்தி நிறுவங்களுக்கும், தொழிற்சாலைகளும் கடிதங்கள் மூலம் ஆணைப்பிறப்பித்துள்ளன. காற்று மாசு கட்டுப்பாட்டு ஆணையம் வாகன் நெரிசல்களை தவிர்க்கவும், கனரக வாகனங்களின் பயன்பட்டை குறைக்கவும் போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.