தொழில் வளர்ச்சி: பிரிட்டானியா, அப்போலோ டயர், ஐநாக்ஸ் உள்பட் 14 நிறுவனங்களுடன் தமிழகஅரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்…

சென்னை: தமிழகத்தில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த  பிரிட்டானியா, அப்போலோ, ஐநாக்ஸ் உள்பட் 14 நிறுவனங்களுடன் சுமார் 9ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழகஅரசு கையெழுத்திடுகிறது. இதன் காரணமாக 7ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் சரிவடைந்துள்ள தமிழக அரசு, பொருளாதாரத்தை மீட்க தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.  அதற்கு தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து,  வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.  அதன் தொடர்ச்சியாக  முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்கள் உடன் சந்திப்பு மற்றும் சிறப்பு பணிக்குழு அமைத்து பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரை, 41 நிறுவனங்கள், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும், 66 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என அரசு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், தற்போத  மேலும் கூடுதலாக, 9,000 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்க உள்ளது.அதன்படி 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது.இதன் வாயிலாக, 6,000த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில்  இன்று 14 நிறுவனங்களோடு ரூ.9,000 கோடி தொழில் முதலீடு செய்ய தமிழக அரசுடன் இன்று ஒப்பந்தம் செய்கிறது.அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மேலும் கேஎஸ்டபிள்யூ (KSW ) எனர்ஜி லிமிடெட் மற்றும் அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.

அவ்வாறு தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், .ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் ஆலை ஓசூரிலும், அப்போலோ டயர் ஆலை ஓரகடத்திலும் அமைக்கப் படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துமுதல்வர்  பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழகத்தின் பொருளாதாரத்தை சரியான பாதையில், கொண்டு வருவதற்கான, எங்களுடைய உறுதியான முயற்சிகள் பலனை தருகின்றன என்று, குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா காலக்கட்டத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.  132 திட்டப் பணிகளுக்கு, 23 ஆயிரத்து, 332 கோடி ரூபாய், முதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.