கோரோனாவில் இருந்து மீள இந்தியா தன்னைத்தானே பணயம் வைத்துள்ளது : ராஜிவ் பஜாஜ்

டில்லி

ந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காகத் தன்னைத் தானே பணயம் வைத்துள்ளதாகப் பிரபல தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் கூறி உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி வருகிறது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்குத் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்ப்ட்டுள்து.  இதனால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு ஏராளமானோர் பணி இழந்துள்ளனர்.

இந்த ஊரடங்கு அமலில் உள்ள போதும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  எனவே வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அது மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தகவல் மக்களைக் குறிப்பாக அடித்தட்டு மக்களை மேலும் அச்சம் கொள்ள வைத்துள்ளது.   தேசிய ஊரடங்கு குறித்து பிரபல தொழிலதிபரும் பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குநர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ராகுல் பஜாஜ், “இந்திய அரசு அமல்படுத்தியுள்ள தேசிய ஊரடங்கு வீணான செயலாகும்.  நான் அறிந்தவரை உலகின் எந்த ஒரு நாடும் இவ்வளவு பெரிய ஊரடங்கைத் தேசிய அளவில்  அமல்படுத்தியது இல்லை.  இது இந்தியா தன்னை தானே பணயம் வைப்பதாகும்.

இதனால் இந்தியா மேலும் பலகீனம் ஆகுமே தவிர வலிமை பெறாது.  நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர்.

அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன.  நம் நாட்டு மக்கள் படிப்பறிவு இல்லாதவரோ, ஒன்றும் தெரியாதவர்களோ கிடையாது.  எனவே அவர்களை ஆடுகளைப் போல் வழி நடத்தத் தேவை இல்லை.

எதிர்காலத்துக்கு இந்த நடவடிக்கைகள் பலன் தருமா என்பது தெரியவில்லை.  இனி வரும் நாட்களில் வைரஸ் தொற்று ஏற்படும் போதெல்லாம் ஊரடங்கு அமலுக்கு வருமோ என்னும் அச்சம் மக்களுக்கு உண்டாகும்.

இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டு ஹோமியோபதி முறையில் பக்க விளைவுகள் இருக்காது எனத் தெரிவித்துள்ளது.   ஆனால் இதன் வாயிலாக அரசு ஏன் இன்னும் தீர்வு காணாமல் உள்ளது?

எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஊரடங்கு காலத்தில் எவ்வித பாதிப்பும் உண்டாகவில்லை.   எங்கள் தரப்பில் இருந்து தற்போது தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.  ஆனால் ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்பட்டால் இந்த நிலைமை கை மீற மிகவும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி