காந்திநகர்,

குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், குஜராத் பாஜக அரசு தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி குஜராத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதியஜனதா அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றுதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத்தில் ஆட்சியை பிடிக்க, செல்வாக்கு மிகுந்த பட்டியல் இனத்தலைவரான ஹர்திக் பட்டேல் ஆதரவுடன் களத்தில் இறங்கி உள்ளது.

இதன் காரணமாக குஜராத்தில் தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரசுக்கு ஆதரவாகள களமிறங்கி உள்ள ராகுல் போர்பந்தர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது,

ஜராத்தில் உள்ள 5 முதல் 10 தொழிலதிபர்கள் பயன்பெறும் வகையிலேயே அரசு பணத்தை செலவு செய்து பாஜக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், குஜராத் பாஜக அரசு மாநில மீனவர்களுக்கு எந்த நன்மைகளையும் செய்ய வில்லை.  மீனவர்களுக்கான டீசல் மானியத்தை நிறுத்த பாஜக அரசுதான் டாடா நிறுவனத்துக்கு ரூ. 33 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. டாடா நிறுவனத்தால் குஜராத் மக்கள், நிலம், தண்ணீர், மின்சாரம் போன்ற அனைத்தையும் இழந்துவிட்டனர் .

ஆனால், “ மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், மீனவர்களுக்காகத் தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், மோடியின் நண்பர்களான தொழிலதிபர்கள் கடலை மாசுபடுத்தியதால், மீன் பிடிப்ப தற்காக ஆழ்கடலுக்குச் செல்லும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கான டீசல் மானியத்தை பாஜக நிறுத்தியது தவறு என்று கண்ட்னமும் தெரிவித்தார்.

குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்திற்கு தேவையான பண உதவிகளை அம்மாநில குறிப்பிட்ட 5 முதல் 10 தொழிலதிபர்களே செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டிய ராகுல்,  குஜராத் மாநிலம் சில தொழிலதிபர்களுக்குச் சொந்தமானது அல்ல என்றும், இந்த மாநிலம்  விவசாயிகள், தொழிலாளர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ராகுல் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தனர்.