இந்தியா-ஆஸ்திரேலியா பாக்ஸிங் டே 3வது டெஸ்ட்: புஜாரா சதத்துடன் 443 ரன்னில் டிக்ளேர் செய்தது இந்தியா

மெல்போர்ன்:

ஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான  3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்த இந்திய அணி, டிக்ளர் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன்  மைதானத்தில்  தொடங்கியது. . டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

‘ முதல் நாளில் இந்திய அணி இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து இன்று 2வது நாளாக ஆட்டம் தொடர்ந்தது.  இந்திய அணி  வீரர் புஜாராவின் அதிரடியாக சதம் விளாசினர். அதுபோல  விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவும் அசத்தலாக ஆடி அரை சதத்தை  தாண்டினர். இந்த நிலையில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்துள்ளது.  புஜாராவுக்கு இது 17வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டிக்ளர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் இன்னும் சற்று நேரத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது.