டில்லி

ருத்துவர்களால்  தவறுதலாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை மரணம் அடைந்தது.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று டில்லியில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் வர்ஷா என்னும் பெண் இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.  அதில் ஒன்று ஆண் குழந்தை, மற்றது பெண் குழந்தை ஆகும்  அந்த இரு குழந்தைகளும் இறந்து விட்டதாக கூறி  மருத்துவர்கள் அவர் கணவரிடம் கொடுத்தனர்.   அவர் அந்தக் குழந்தைகளுக்கு இறுதிச் சடங்கு செய்ய கொண்டு சென்ற போது அதில் ஆண் குழந்தை உடலில் அசைவு இருந்ததைக் கண்டு பிடித்து மருத்துவமனையில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து போலிசில் புகார் அளிக்கப்பட்டது.  ஆறு மாதங்களில் பிறந்த குழந்தை என்பதால் இந்தக் குழந்தையை பராமரிக்க ரூ. 50 லட்சம் மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக ஒரு தகவல் வந்தது.    இதற்கிடையே தவறாக இறந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்.   இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அந்த ஆண் குழந்தை மரணம் அடைந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், “உயிரோடு உள்ள குழந்தையை இறந்ததாக தெரிவித்த மருத்துவரை சிறையில் அடைக்க வேண்டும்.   இன்னொரு குடும்பத்துக்கு இது போல துயரம் வரக்கூடாது என்பதால்,  இந்த மாக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வெண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளனர்.