காஷ்மீரில் ஊடுருவல்: மோதலில் பயங்கரவாதி ஒருவர் பலி

ஜம்மு:

ம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், பம்போர் நகரம் அருகே உள்ள லாடூ கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தை பாதுகாபாப்புப் படையினர் இன்று மாலை சுற்றி வளைத்தனர்.

a
\இதையடுத்து சுதாரித்து கொண்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சில மணிநேரத்துக்கு நீடித்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கிடையே, துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற லாடூ கிராமத்திற்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் வரைவழைக்கப்பட்டுள்ளனர்.  தேடுதல் வேட்டை தொடர்கிறது.