இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்! வங்கதேசம் அதிர்ச்சி தகவல்

டாக்கா,

ந்தியாவிற்குள் 2000 பயங்கரவாதிகள் ஊடுருவி  இருப்பதாக வங்கதேச அரசு இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்துள்ளது.

இந்தியாவின்  வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவலை இந்தியாவுடன் பகிர்ந்துள்ளது வங்கதேசம்.

இதுகுறித்து, இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு வங்கதேச அரசு அனுப்பியுள்ள தகவலில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின்  வடகிழக்கு மாநிலங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும், ஹர்கத் உல் ஜிகாதி, அல் இஸ்லாமி, வங்கதேச ஜமாத் உல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 720 பேர் மேற்கு வங்கம் வழியாகவும், ஆயிரத்து 290 பேர் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்கள் வழியாகவும் ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளதாக வங்கதேச அரசு குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பி.கே.ஷேகல், வங்கதேசம் முக்கிய தகவலை அளித்திருப்பதாகவும், இந்த விவகாரத்தை இந்திய அரசு கவனமாக கையாள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை  தீவிரப்படுத்த வேண்டும் என்றும், எல்லை பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவப்படையினரை முழுவீச்சில் முடுக்கி விட வேண்டும் எனவும்  அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.