Random image

பண வீக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது….அருண்ஜெட்லி

டில்லி:
பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, நாட்டின் பொருளாதார நிலை குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நிதித்துறை உயரதிகாரிகள், ரிசர்வ் வங்கி கவர்னர், பிரதமரின் நிதித்துறை ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் இல்லத்தில் இன்றிரவு நடைபெற்ற ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘இந்த ஆண்டின் நிதி பற்றாக்குறை அளவு 3.3 சதவீதத்தை கடக்க விட மாட்டோம். கடந்த ஆண்டு கணிக்கப்பட்ட இலக்கையும் கடந்து இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

முதன்மை செலவினங்களை பொருத்தவரை ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி ஒதுக்கீடு தொகையில் 44 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. எவ்வித வெட்டுகளும் இல்லாமல் இந்த ஆண்டுக்கான முதன்மை செலவினங்கள் 100 சதவீத ஒதுக்கீட்டுக்குள் இருக்கும். இந்த ஆண்டில் வருமான வரி வசூல் அபரிமிதாக உள்ளதால் செலவினங்களை சரி கட்ட ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி மூலம் கிடைக்கும் பணம் உதவிகரமாக இருக்கும்’’என்றார்.