புதுடெல்லி: காய்கறிகளின் விலையேற்றத்தால், குறிப்பாக வெங்காயத்தின் விலையேற்றத்தால், நாட்டின் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுப்பாடாக இருந்துவந்த சில்லறை பணவீக்கம், நவம்பர் மாதவாக்கில், 5.54% எகிறியது. வெங்காயம், தக்காளி மற்றும் உருளை ஆகியவற்றின் விலை ஏறாமல் இருக்க ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தக் காய்கறிகளின் விலை ஏறிவிட்டது.

அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சி தாமதமாகவேத் தொடங்கியது. இதனால் சில்லறை பணவீக்கம் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீறிச் சென்றது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு, சில்லறைப் பணவீக்கமானது, இரண்டாவது அரையாண்டில் 5.1% முதல் 4.7% என்ற அளவில் இருக்குமென எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது. மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளான வெங்காயம், பால், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்றவைகளில் விலைய‍ேற்றமே இதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நிதியாண்டின் முதல் பாதியில், சில்லறை பணவீக்கம் 4% முதல் 3.8% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.