மேட்டூர் அணை : நீர் வரத்து குறைந்து 16 ஆயிரம் கன அடி ஆனது

மேட்டூர்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் கனமழையால் காவிரி ஆற்றில் நீர் அதிகமாக திறந்து விடப்பட்டது.   ஒரு கட்டத்தில் அது வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக உயர்ந்தது .   தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை வெகுவாக குறைந்துள்ளது.   அதனால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் நீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு இதனால் நீர் வரத்து குறைந்து வருகிறது.   இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர் மட்டம் 120.19 அடியாக உள்ளது.   அணைக்கு நீர் வரத்து தற்போது வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக உள்ளதால் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மேட்டூர் அணை மூன்று முறை அதன் முழு கொள்ளளவன 120 அடியை எட்டி உள்ளது/