சென்னை,
ருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே சோதனை நடைபெறுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று மதுரை வந்த மத்தியஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் நிருபர்கள் தலைமை செயலாளர் வீட்டில் ரெய்டு நடப்பது குறித்து கேட்டதற்கு, வருமான வரித்துரைக்கு கிடைத்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் அடிப்படையிலேயே  தற்போது சோதனை நடைபெற்று வருவதாக கூறினார்.

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருப்பவர்  ராம மோகனராவ். இவரது வீடு சென்னை  அண்ணா நகர் அய்யப்பன் கோவில் அருகே 6-வது மெயின்ரோட்டின் முதல் தெருவில் உள்ளது.
இன்று அதிகாலை 5 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ராமமோகனராவின் வீட்டுக்குள் திடீரென அதிரடியாக புகுந்தனர். உடனடியாக பல குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
வீட்டை உள்பக்கமாக  பூட்டிக் கொண்டு, அனைத்து அறைகளிலும்  சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனையின் காரணமாக வீட்டில் இருந்த யாரும் வெளியில் செல்ல அனுமதிக் கப்படவில்லை. வெளியாட்களையும் வீட்டுக்குள் வர வருமான வரித்துறையினர் அனுமதிக்க வில்லை.

காலை 5 மணியில் இருந்து சோதனை நடந்த போதிலும் 9 மணிக்கு பின்னரே அந்த தகவல் வெளியில் கசிய தொடங்கியது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு உயர் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தலைமை செயலாளர் பதவி என்பது அரசு நிர்வாகத்தில் மிகவும் உயரிய பதவியாகும். இதுபோன்று உயர் பதவிகளில் இருப்பவர்களின் வீடுகளில் அவ்வளவு எளிதாக சோதனைகள் நடத்தப்படுவதில்லை.
இது போன்ற ஒரு சூழ்நிலை யில் தமிழக அரசின் தலைமை செயலாளரான ராமமோகன ராவின் வீட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது என்றார்.
 
 
Raids on Tamil Nadu’s Chief Secretary were conducted based on credible information , says Union Minister Nirmala Sitharaman.