வாஜ்பாய் துக்கத்தை மறந்து முழு கம்பத்தில் பறந்த தேசிய கொடி

டில்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16ம் தேதி மாலை காலமானார். அவரது மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், விமானநிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், டில்லியில் உள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தில் தேசிய கொடி இன்று அரை கம்பத்தில் பறக்கவிடாமல் வழக்கம் போல் பறந்ததை காண முடிந்தது. மத்திய அரசு அறிவித்த துக்கம் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்திற்கு பொருந்தாதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.