திருப்பதி தேவஸ்தானத்தில் சுதாநாராயண மூர்த்திக்கு பதவி!  

திருப்பதி:

சமூக சேவகி சுதா நாராயணமூர்த்தியை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது.

நேற்று   அவருக்கு  தேவஸ்தான இணைஅதிகாரி கே எஸ் சீனிவாசராஜூ பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான சேகர்ரெட்டி திருமதி சுதா நாராயணமூர்த்திக்கு முன் இந்தப்பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.