மும்பை

ன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைவர் நாராயண மூர்த்தி மும்பையில் இளைஞர்கள் கூட்டத்தில்  உரையாற்றினார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை அமைத்தவரும் முன்னாள் தலைவருமான நாராயண மூர்த்தி பல விருதுகளை பெற்றுள்ளார்.  இவருடைய நிறுவனத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர்.   இவர் அந்த நிறுவன தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு தற்போது முதன்மை வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.

நாராயண மூர்த்தி சனிக்கிழமை அன்று மும்பையில் கல்லூரியில் நடந்த நிகழ்வில்கலந்துக் கொண்டார்.  அப்போது அவர் இளைஞர்களிடம்,  ”நமது முன்னோர்கள் சுதந்திரத்துக்காக அரும்பாடு பட்டு அதை நமக்கு பெற்றுத் தந்தனர்.  தற்போது நாட்டின் பல பாகங்களிலும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.   நமது முன்னோர்கள் விரும்பியதற்கு மாறான நிலையில் நாடு தற்சமயம் உள்ளது.

நீங்கள் உங்கள் நெஞ்சை உயர்த்தி எனது முன்னோர்கள் விரும்பிய நாடு இது இல்லை என தைரியமாக சொல்ல வேண்டும்.   உங்களில் எத்தனை பேர் இவ்வாறு சொல்கிறீர்கள்? ஒருவரும் சொல்வது இல்லை.  அதனால் தான் நாடு இந்த நிலைக்கு வந்துள்ளது.   ஒருவருக்கும் மற்றவர் தவறை சுட்டிக் காட்ட மனம் வருவதில்லை.  இது தவறானது

எனது நிறுவனத்தில் பணி புரிந்த ஒரு அதிகாரி தனக்கும் தன்னைப் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் மட்டுமே ஊதிய உயர்வை அவர் காலத்தில் அளித்தார்.  அதனால் மற்ற ஊழியர்கள், அதாவது காவலர் உள்ளிட்ட யாருக்கும் ஊதிய உயர்வு கிடைக்கவில்லை.   அதன் விளைவு பல முக்கியமான தொழில்நுட்ப கருத்துக்கள் குப்பைக்கூடைக்கு சென்றன.

அதன்பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் பதவி விலகிய பிறகு பல வரவேற்கத்தக்க மாறுதல்கள் நிகழ்ந்தன.  நான் இதை கவனித்து நடவடிக்கை எடுத்ததால் எனது நிறுவனம் தப்பியது.   எனவே நாம் நமது கடமையை சரிவர கவனித்தால் மட்டுமே நாமும் நம்மை சார்ந்தவரும் முன்னேற முடியும்” என உரையாற்றி உள்ளார்.