விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய 5வது முறையாக மேலும் 6 மாதம் அவகாசம்! தமிழகஅரசு அரசாணை

சென்னை:

மிழகத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள  கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து  தமிழகஅரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது 5வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கட்டிட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிங்களை வரைமுறைப்படுத்த கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து,  வி.பி.ஆர் மேனன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டிங்களை இடிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விசாரணையை தொடர்ந்து,  விதிமீறல் கட்டிடங்கள் வரன்முறை செய்ய விண்ணப்பங்களை பெற்று வரன்முறை செய்ய உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து  தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்களை வரன்முரை படுத்துவதற்காக நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் 113 சி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. அ தன்படி 2007 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வந்தது.

இதற்கான கால அவகாசம் தொடர்ந்து 4 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 5 வது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நீட்டிக்கப்பட்ட அவகாசம்   ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் ஆறுமாத காலத்திற்கு கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.