விதிமீறல் கட்டிடங்கள் வரன்முறை: விண்ணப்பங்கள் பெற உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை,

சென்னையில் உள்ள விதிமீறல் கட்டிடங்களை வரைமுறைப்படுத்தும் வகையில் விண்ணப்பங்கள் பெறலாம் என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கட்டிட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிங்களை வரைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து,  வி.பி.ஆர் மேனன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிமீறல் கட்டிடங்கள் வரன்முறை செய்ய விண்ணப்பங்களை பெற என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், விண்ணப்பங்கள் பெற்றாலும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அக்டோபர் 3ம் தேதிக்குள் பதிலளிக்கவும்  உயர்நீதிமன்றம் உத்தரவு.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Infringement Buildings Procedure: The High Court is permitted to receive applications, விதிமீறல் கட்டிடங்கள் வரன்முறை: விண்ணப்பங்கள் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
-=-