டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,86,864 ஆக உயர்ந்து 42,578 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 61,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 20,86,864 ஆகி உள்ளது.  நேற்று 937 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 42,578 ஆகி உள்ளது.  நேற்று 50,387 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,27,669 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,16,160 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 10,483 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,90,262 ஆகி உள்ளது  நேற்று 300 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,092 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,906 பேர் குணமடைந்து மொத்தம் 3,27,281  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,880 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆகி உள்ளது  இதில் நேற்று 119 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,690 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,488 பேர் குணமடைந்து மொத்தம் 2,27,575 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,171 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,06,960 ஆகி உள்ளது  இதில் நேற்று 89 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,842 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,594 பேர் குணமடைந்து மொத்தம் 1,20,464 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,670 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,64,924 ஆகி உள்ளது  இதில் நேற்று 101 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,998 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,951 பேர் குணமடைந்து மொத்தம் 84,232 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,192 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,42,723 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,082 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1108 பேர் குணமடைந்து மொத்தம் 1,28,232 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.