ஊசிமூலம் செய்யப்படும் கருத்தடை முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இவை முதல்கட்டமாக விரைவில் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகிய இடங்களிலும் அடுத்தகட்டமாக மாவட்ட துணை மருத்துவமனைகளிலும், சமூக சுகாதார மையங்களிலும் கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்ரியா படேல் மக்களவையில் தெரிவித்தார்.

injection

இந்த ஊசி மருந்து டையாக்ஸி மெட்ராக்ஸி புரோஜெஸ்டிரோன் அசிட்டேட் என்ற வேதிப்பொருளைக் கொண்டது. இந்த ஊசியை கைகளிலோ அல்லது இடுப்பிலோ போட்டுக்கொள்ளலாம். இது மூன்று மாதங்கள் வரை கருத்தரிப்பதை தடை செய்யும். இது முற்றிலும் இலவசம் ஆகும்.
ஏற்கனவே ஐந்து வகையான கருத்தடை முறைகள் இந்தியாவில் வழக்கில் இருக்கிறது. ஆண் கருத்தடை முறை, பெண் கருத்தடை முறை, ஐயுடி, ஆணுறைகள் மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றுடன் ஆறாவதாக இந்த ஊசியும் சேர்க்கப்பட்டுள்ளது.