கோல்டன் குளோப் போட்டி: சூறாவளியில் சிக்கிய இந்திய கடற்படை வீரரை மீட்க முயற்சி….

கொச்சி:

டைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான  கோல்டன் குளோப் போட்டியில் பங்கேற்ற இந்திய கடற்படை வீரர் சூறாவளியில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், அவரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் கோல்டன் குளோப் சர்வதேச போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.  கடந்த ஜூலை 1–ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில்  இதில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார்.

இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி

‘துரியா’ என்ற படகு மூலம் கடலில்  உலகை சுற்றி வரும் டோமி, கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்துள்ளார். தற்போது அவர்  தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்ததார். அங்கு ஏற்பட்ட திடீர் சூறாவளியில் சிக்கிய டோமி கடுமையான சிரமத்தை எதிர்கொண்டார். கடலின் சீற்றத்தால் சுமார் 14 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்துள்ளது. இதனால்  படகில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரால் படகை தொடர்ந்து அங்கிருந்து இயக்க முடியவில்லை. இதையொட்டி உடனடியாக, தன்னை காப்பாற்றுமாறு, இந்திய கடற்படைக்கும்.  பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும்  தகவல் அனுப்பினார்.

தகவல்கிடைத்த உடன் அவர் கடலில் தத்தளிக்கும் பகுயை நோக்கி  இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. அப்போது அவரது படகு, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு  இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படையினர் விரைந்துள்ளனர்.

கடலில் தத்தளிக்கும் டோடி விரைவில் மீட்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.