கிம் உபயோகித்த ஏர் சீனா விமான விவரங்கள்

சிங்கப்பூர்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க வட கொரிய அதிபர் சென்ற ஏர் சீனா விமானம் குறித்த விவரங்கள் இதோ

வட கொரிய அதிபரின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் விமானத்தில் பயணம் செய்ய மிகவும்  பயப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.  அதே நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தாம் பதவி ஏற்ற 2011 ஆம் வருடத்தில் இருந்து இதுவரை உள்நாட்டு விமானப் பயணமாக 4300 கிமீ பறந்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த சிங்கப்பூருக்கு கிம் ஏர் சீனா விமானத்தில் பறந்தார்.  பேச்சு வார்த்தை முடிந்ததும் அதே விமானத்தில் திரும்பினார்.   அடுத்ததாக வட கொரிய அதிபரை அமெரிக்க அதிபர் அமெரிக்க நாட்டுக்கு அழைத்துள்ளார்.   வட கொரியாவில் நவீன விமானங்கள் இல்லாததால் அப்போதும் அவர் ஏர் சீனா விமானத்தில் தான் பயணம் செய்ய உள்ளார்.

ஏர் சீனா விமானத்துக்கு ஒரு நாளைக்கு 40000 அமெரிக்க டாலர்கள் வாடகை வசூலிக்கப் படுகிறது.  இந்த விமானம் அடிக்கடி பயணம் செய்த விமானம் இல்லை என்பதால் ஓவ்வொரு முறையும் பராமரிப்பு பணிகள் முடித்த பிறகே பயணத்தை தொடங்க உள்ளது.   இந்த விமானத்தில் ஓவ்வொரு அதிகாரிக்கும் தனித் தனி அறைகள் போன்ற வசதிகள் கிடையாது.

அத்துடன் வகுப்பு வாரியான பிரிவு கிடையாது என்பதால் ஒவ்வொரு இருக்கையிலும் தனித்தனி டிவிகள் அமைக்கப்படவில்லை.  அனைவருக்கும் பொதுவாக ஓரிரு டிவிக்கள் மட்டுமே பொருத்தப் பட்டிருக்கும்.   அத்துடன் இருக்கைகளும் மிகுந்த வசதிகளுடன் இல்லை.

இந்த விமானம் கடந்த 23 வருடங்களாக பறந்துக் கொண்டு உள்ளது.   விரைவில் இந்த விமானத்துக்கு பதில் நவீன ரக விமானம் மாற்ற ஏர் சீனா திட்டமிட்டுள்ளது.

நன்றி : ASIA TIMES