இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகடமி விருது

டில்லி,

ந்த ஆண்டு தமிழக எழுத்தாளர்கள் இன்குலாப் மற்றும் யூமா வாசுகி ஆகியோருக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதான சாகித்ய அகடமி விருது இந்த ஆண்டு இன்குலப், யீமா வாசுகி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படைப்பாளிகளான கவிஞர் இன்குலாப், வாசுகி ஆகியோருக்கு சாகித்ய அகடமி விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.

இன்குலாப்

காந்தள் நாட்கள் கவிதை தொகுப்புக்காக கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

1994ம் ஆண்டு பிறந்த இன்குலாப் சிறந்த தமிழ்க்கவிஞர். மற்றும் பேராசிரியராகவும் சொற்பொழிவாளராகவும், சிறந்த நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தார். சிறுகதை எழுத்தில் அதிக ஆர்வம் கொண்ட அவர் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார்.

பொதுவுடமை சிந்தனையாளரான இன்குலாப்-ன் எழுத்துக்கள்  சமூகச் சிக்கல்கள், ஒடுக்கு முறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே அமைந்திருந்தன.

ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் கீழக்கரையில்  பிறந்த இன்குலாப்பின்இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதால் தனது பெயரை இன்குலாப் என மாற்றிக்கொண்டார்.  இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

 

 

யூமா வாசி

1966ம் ஆண்டு ஜூன் 23ந்தேதி பிறந்த யூமா வாசியின் இயற்பெயர் தி.மாரிமுத்து. நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றுள்ள இவர் மிகச்சிறந்த எழுந்தாளர்களில் ஒருவ்ர.  “யூமா. வாசுகி” எனும் புனைப்பெயரில் இவர் எழுதி வருகிறார்.

”உனக்கும் உலகுக்கும்”, “தோழமை இருள்”, “அமுத பருவம்” எனும் கவிதை நூல்களையும், “உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைப் படைப்பையும், “மோர்னிங் திக்கெட்ஸ்” எனும் ஓவியப் படைப்பையும் வழங்கியிருக்கிறார்.

இவர் எழுதிய “ரத்த உறவு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

கசாக்கின் இதிகாசம் மலையாள நூல் மொழிபெயர்ப்புக்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விருதின்போது,  பரிசுத்தொகையாக 1 லட்ச ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.

இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.