சம்மன் நேரில் வரட்டும்… பார்க்கலாம்! சசிகலா


பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதற்கு பதில் அளித்துள்ள சசிகலா, சம்மன் நேரில் வரட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என எகத்தாளமாக கூறி உள்ளார்.

ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெ.தோழி சசிகலா மற்றும் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு கடந்த 22ந்தேதி சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், கடந்த வாரம்  முன்னாள் தலைமை செயலாளர்கள்  ஷீலா பாலகிருஷ்ணன்,  ராமமோகன் ராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அதைடுத்து, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் மின்னஞ்சலில் சம்மன் அனுப்பியுள்ளது.

மின்னஞ்சலில் சம்மன் வந்துள்ளது குறித்து சசியிடம் பெங்களூரு சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதற்கு பதில் அளித்துள்ள சசிகலா,  சம்மன் நேரில் வரட்டும்….  பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எகத்தாளமாக  கூறியதாக பெங்களூரு சிறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

You may have missed