வீடியோ குறித்து விசாரணை நடத்தக் குழு: கார்த்திகேயன்

சென்னை,

ஜெ.சிகிச்சை குறித்த வீடியோ வெளியானது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவு நாளை வெளியாக உள்ள நிலையில், ஜெ. சிகிச்சை வீடியோவை வெளியிட தடை செய்து ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சேனல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.