டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு

டில்லி

ந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.69 ஆகி உள்ளது.

சமீப காலமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.  அத்துடன் அமெரிக்கா தனது வர்த்தகத்தில்  ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.    இதனாலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவது அதிகரித்தது.

நேற்று ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் எனவும் அதை மீறினால் பொருளாதாரத் தடை விதிக்கும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.    அமெரிக்காவின் இந்த மிரட்டலால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.  அத்துடன் சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் மேலும் விலை உயரலாம் என சொல்லப்படுகிறது.

நேற்றைய முன் தினம் டாலருக்கு ரூ. 68.25  என இருந்த ரூபாய் மதிப்பு நேற்று 68.61 ஆக மாறியது.   இன்று காலை அது மேலும் குறைந்து ரூ.69.10 ஆகி உள்ளது.   வரலாற்றிலேயே இவ்வாறு சரிவது இது முதல் முறை ஆகும்.   இதே நிலை நீடித்தால் இது மேலும் குறைந்து ஒரு டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.70ஐ தொடும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.