Random image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றும் சரிவு

மும்பை

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து இன்று ரூ.72.91 ஆகி புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நாள்தோறும் குறைந்து வருகிறது.   இந்த சரிவினால் இந்திய பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.    ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 63 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதுதினசரி இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துக்  கொண்டே வருவதால் பொருளாதார நிபுணர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.   சீனப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா இன்னும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.  அதனால் அனைத்து நாட்டு பண மதிப்பும் சரியலாம் என்பதுடன் இந்திய ரூபாய் மதிப்பு மேலும் ச்ர்யும் என கூறப்படுகிறது.

நேற்று  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூஆ மதிப்பு ரூ.71.69 ஆக இருந்தது.  தற்போது இருஒரு ரூபாய்க்கு மேல் சரிந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.   தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.91 ஆக வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது.