Random image

இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பங்குச் சந்தையில் ரூ.3.62 லட்சம் கோடி இழப்பு

டில்லி

ந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க – சீனா வர்த்தகப் போரினால் பங்குச் சந்தையில் ரூ.3.62 லட்சம்  கோடி  அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நடக்கும் வர்த்தகப் போர் மிகவும் வலுத்து வருகிறது.  அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டு இறக்குமதி வரியை அதிகரித்து வருகிறது.   சுமார் 20000 கோடி அளவுக்கு சீன பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை உயர்த்தியது.    அது மட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

இதன் விளைவு இந்திய பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்து வருகிறது.  கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் மும்பை சென்செக்ஸ் குறியீட்டு எண் 37121.22 ஆக குறைந்தது.   இத் நேற்று முன் தினத்தை விட 169.45 புள்ளிகள் குரைவாகும்.   இந்த வார தொடக்கத்தில் இருந்து மூன்று நாட்களில் மும்பை பங்குச் சந்தையில் 970 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது.  இதனால் மும்பை பங்குச் சந்தை பங்குகளில் ரூ.3.62 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தை இழப்பு குறித்து முதலீட்டாளர் ஒருவர், “இந்திய பங்குச் சந்தையை சர்வதேச பங்குச் சந்தை நிலவரங்கள்தான் முடிவு செய்யும்.   தற்போது சர்வதேச பங்குச் சந்தையின் நிலை சாதகமாக உள்ளது.   ஆனால் அதற்கு நேர்மாறாக இந்திய பங்குச் சந்தை கடுமையாக சரிந்துள்ளது.    இதற்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிவுதான் முக்கிய காரணம்” என தெரிவித்துள்ளார்.

இந்த சரிவு குறித்து, ”ஏற்கனவே தொடர்ந்து பங்குச்சந்தையில் சரிவு ஏற்படுவது முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பங்குச்சந்தையில் /இந்தியர்கள் துணிகர முதலீடு மேற்கொள்வது குறைவாகவே உள்ளது..  நீண்ட காலமாக பங்குச்சந்தை போக்கை கண்காணித்து வருபவர்களும் தற்போது இழப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.  மேலும் இதே போல நிலைமை தொடர்ந்தால் பங்கு முதலீடுகள் மேலும் சரிந்து, குறைந்த லாபம் கிடைத்தாலும் நிலையான வருவாய் உள்ள சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கும்” என்று சந்தை நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.