கொரோனா ஹாட் ஸ்பாட் ஆன ஜீ நியூஸ் : பின்னணி என்ன?

நொய்டா

ஜீ நியூஸ் சேனலில் பணி புரியும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால்  அது கொரோனா ஹாட் ஸ்பாட் ஆனது குறித்த விவரங்கள் இதோ

கடந்த 15 ஆம் தேதி அன்று ஜீ நியூஸ் ஊடகத்தில் பணி புரியும் ஒரு ஊழியருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்கள் வந்தன.   அதையொட்டி ஜீ மீடியா அலுவலக்த்தில் அவருடன் பணி புரிந்தவர்கள் உள்ளிட்ட அனைவர் குறித்த விவரங்களை ஜீ மீடியா அலுவலகம் விசாரிக்க தொடங்கியது.

இவ்வாறு 51 பேர் கண்டறியப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டதில் கடந்த 18 ஆம் தேதி 28 பேருக்கு கொரோனா உறுதியானது.  இவர்களில் 15 பேர்ர் ஜி பி நகர் பகுதியிலும் மற்ற 13 பேர் டில்லி,காசியாபாத், மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளிலும் வசித்ஹ்டு வருகின்றனர்.    டில்லி –நொய்டா எல்லைகள் சீலிடப்பட்டன.  ஜி டிவி அலுவலகமும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும் சீலிடபட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்ப்டுகிர்

ஜீ டிவியில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததை நொய்டா தகவல் தொடர்பு அதிகாரி உறுதி செய்துள்ளார்.  ஊழியர்களுக்கு கொரோனா பரவியது குறித்து விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவ்ல்கள்வெளியாகி உள்ளன.  இந்த நிகழ்வுகளில் ஜி ஊடகத்தின் தலைமை ஆசிரியர் சுதிர் சவுத்ரியின் கவனமற்ற நடவடிக்கைகளும் காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்து கொரோனா பாதிப்பு உறுதியான ஊழியர்களில் சிலர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மே 15 ஆம் தேதி அன்று ஒரு ஊழியருக்கு கொரோனா உறுதி ஆனபோது நிகழ்வுகளை மாற்று வசதி மூலம் ஒளிபரப்பலாம் எனக் கூறிய போது அதை சுதிர் சவுத்ரி மறுத்தார்  மாறாக நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் எனக் கூறியதோடு அதை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் நிகழ்வில் பேசிய  போது ஜீ டிவி ஊழியர்கள் நாட்டுக்குப் பணி செய்வதில் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உடல் நலமற்று இருந்தாலும் செய்திகளை ஒளிபரப்புவதை நிறுத்தக் கூடாது எனக் கூறினார்.  இது அவருடைய பொது வாழ்க்கையின் முகம் ஆகும்.  ஆனால் அவருக்கு ஊழியர்களிடையே மற்றொரு முகம் உள்ளது.

மே மாதம் 18 ஆம் தேதி அன்று 28 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆனதால் நாங்கள் அனைவரும் பயத்தில் ஆழ்ந்தோம்.  ஏனெனில் நாங்கள் அனைவரும் ஒரே கட்டிடத்தில் பணி புரிந்து வந்தோம்.  மற்றவர்களையும் பரிசோதிக்க வேண்டுமென நாங்கள் சுதிர் சவுத்ரிக்கு வேண்டுகோள் விடுத்தோம்.  ஏனெனில் பலருக்கு ஜுரம் மற்றும் இருமல் போன்றவை இருந்தன.

ஆனால் அவர் ஜுரம், இருமல் போன்ற புகார்களை நான் நாளை முதல் கேட்கவிரும்பவில்லை.  உங்கள் அனைவருக்கும் விரைவில் ஜுரம் தானாகச் சரியாகும்.  ஆனால் புகார் அளிப்பவருக்கு குணமானாலும் அது இருப்பதாகத் தோன்றும்” எனத் தெரிவித்தார்.   . இது கிட்டத்தட ஒரு மிரட்டலாகவே இருந்தது.

மே மாதம் 18 ஆம் தேதி அன்று ஜீ ஊடக தலைமை அதிகாரி புருஷோத்தம வாசுதேவ் வீடியோ காட்சி மூலம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர்.  அப்போது அவர் எக்காரணத்தைக் கொண்டும் ஒளிபரப்பு நிற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளார்.  இது போல நிறுவனம் ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட ஒரு ஊழியர் நொய்டாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர் தனது வயதான தாயுடன் வசித்து வந்தார்.  அவர் தனது தாயாருக்கு பரிசோதனை செய்ய ஜி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.  ஆனால் ஜி நிர்வாக மனித வள நிர்வாகி அதை மறுத்து விட்டார்.  அது ஊழியரின் பொறுப்பு என்றும் அதை அவர்தான் கவனித்துக் கொள்ளவேண்டும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.” எனக் கூறி உள்ளார்.