டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி:

டெல்லி வன்முறைக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், காங்கிஸ் மக்களவை உறுப்பினர்களை அவசர கூட்டம் ஒன்றுக்காக அழைத்த காங்கிரஸ் கட்சி, டெல்லி வன்முரை குறித்த் காங்கிரஸ் எம்பி அதிர் ராஜன் சவுத்ரி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆலோசித்துள்ளது.

கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அந்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் கலவரமாக நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’ தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 1427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முந்தினம் தொடங்கியது. டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர்.

டெல்லி வன்முறையைக் கண்டித்து கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டும், வாயை மூடிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்கள், டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று நடத்த கூட்டதின் போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங், நேற்று, கம்ல்நாத் அரசை கொண்டு வர பாஜக குதிரை பேரம் நடத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

You may have missed