ராஜஸ்தானில்  கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி, தனக்குச் சொந்தமான நிலத்தை பள்ளிக் கூடத்துக்கு தானமாக வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க தமிழக காவல்துறையின் தனிப்டை ராஜஸ்தான் சென்றது.  அங்கு ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களைப் பிடிக்க, தனிப்டை முயன்றபோது துப்பாக்கியால் கொள்ளையர்கள் சுட ஆய்வாளர் பெரியபாண்டி சம்பவ இடத்தலேயே பலியானார்.  இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த இலையில், ஆ.ய்வாளர் பெரியபாண்டி குறித்த நெகிழ்வான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஆய்வாளர் பெரியபாண்டி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நிலக்கிழார் செல்வராஜ் என்பவரின் மகன். இவருக்கு ஒரு சகோதர் உண்டு.

இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்த பெரியபாண்டி, கடந்த 2000-ம் ஆண்டில் காவல்துறையில் சேர்ந்தார். கிட்டத்தட்ட 17   வருடங்களுக்குப் பிறகு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். தனது  ஊரான சாலைப்புதுர் கிராமத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த நிலத்தைக்கூட அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தானமாக பெரியபாண்டி அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பெரிய பாண்டியின் மரணம் அந்த கிராம மக்களைப் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.