முடங்கிய இன்ஸ்டாகிராம் மீண்டு வந்தது

லிபோர்னியா

நேற்று முகநூலின் அங்கமான இன்ஸ்டாகிராம் பல நாடுகளில் முடங்கி சில நேரம் கழித்து மீண்டது.

முகநூலின் ஒரு அங்கமான இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பகிரும் சமூக வலை தளமாகும்.  இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி உலகின் பல பிரபலங்களும் தங்கள் புகைப்படங்களை பதிகின்றனர்.   இந்த இன்ஸ்டாகிராமில் சுமார் 10 கோடிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர்.  இதன் மூலம் சிறு தகவல்கள் மற்றும் சிறு வீடியோக்களும் பதியலாம்.

நேற்று பல நாடுகளில் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது.  இதனால் இதன் பயனாளர்களால் எந்த ஒரு பதிவையும் பதிய முடியவில்லை.    அதற்கு பதிலாக பதிவுகளை தற்போது பதிய இயலாது என்னும் அறிவிப்பு வந்ததாக பயனாளிகள் தெரிவித்தனர்.   உடனடியாக இது குறித்து மற்றொரு வலை தளமான டிவிட்டரில் புகார் அளித்தனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு இன்ஸ்டாகிராம் மீண்டது.   இது தற்காலிக முடக்கம் என்றாலும் பயனாளிகள் பெரும் பதட்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.    இந்த முடக்கம் வடக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்திய, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்க மறுத்துள்ளனர்.